முல்லைப் பெரியாறு அணை வரலாறு






1790 மார்ச் 6ல் சென்னை மாகாணத்தின் மதுரை மாவட்டம் உருவானதுஏப்ரல் 5ல்முதல் கலெக்டராக மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல் இராமநாதபுரம் மன்னர்சேதுபதிமுல்லைபெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர்முழுவதையும் மதுரைஇராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவைமேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார்அந்த குழு தங்கி காடுகளை அழித்து,அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்ததுநிதி வசதியின்றிதிட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
1807ல் மதுரை கலெக்டர் ஜார்ஸ்பேரிஸ்மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்றுபெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டுஆய்வு செய்யமாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார்ஆனால் 1808ல்நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார். 1837ல்கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும்பணியில் ஈடுபட்ட போதுவேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும்கூலிஅதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான் முக்கியநோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கைசமர்ப்பித்துள்ளார்பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின்நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித்என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார்இந்தத் திட்டத்திற்கு தலைமைப்பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார்இதனால் இந்தஅணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டதுமேலும் 1876 ஆம்ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்தஅணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.
இறுதியாக 1882 இல் இந்தத் திட்டம் ஆங்கிலேய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுமேஜர் ஜான் பென்னிகுயிக்கிடம் அதன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதுஅதற்காகஅவர் 1884 இல் தயாரித்து சமர்ப்பித்த செலவுத் திட்டமும் உயர் அதிகாரிகளின்ஒப்புதலைப் பெற்றது

கட்டுமானப் பணி


இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும்ஆற்றின்தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடிஉயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டதுஅணையைஅடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால்வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும்இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது.மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத்தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்துஇதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில்கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.
1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவங்கப்பட்டதுஆங்கிலேயப்பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின்கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டதுஇந்தப்பகுதிமுழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான மேஜர் ஜான்பென்னி குயிக் இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவுசெய்தார்இதன்படி சென்னை மாகாணத்தின் கூடலூர் மலைப்பகுதியிலிருந்துதேக்கடி வரையும் அங்கிருந்து அணை கட்டும் பகுதி வரை கம்பிவடப் பாதைகளைஅமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார்இந்த அணையின்கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது.அணை சுண்ணக்கல்சுர்க்கி கலவையால் கட்டப்பட்டது.
அடர்ந்த காடுவிஷப்பூச்சிகள்காட்டு யானைகள்காட்டு மிருகங்கள்கடும்மழைதிடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல்மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்தநிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்டஅணை அடித்துச் செல்லப்பட்டதுஅதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம்ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக்இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும்விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவேமுல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார்இந்த பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும் அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர்மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டதுகட்டிமுடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக்பிரபு திறந்து வைத்தார்இவ்வணையால் தேனிதிண்டுக்கல்மதுரைசிவகங்கைமற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர்இன்றும் கிடைத்து வருகிறது.

Comments

  1. வணக்கம், அத்தனையும் ரத்தின சுருக்கமான பதிவு.

    ReplyDelete

Post a Comment