போராட்டங்கள்



முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு இல்லை என்கிற அச்சத்தில் கேரளஅரசியல் கட்சிகளும்பாதுகாப்புடன் பலமாக இருக்கிறது என்கிற நிலையில்தமிழக அரசியல் கட்சிகளும் உள்ளனகேரள அரசியல் கட்சியினர் முல்லைப்பெரியாறு அணைக்குச் சென்று பல்வேறு போராட்டங்களைச் செய்துவருகின்றனர்தமிழ்நாடுகேரள மாநில எல்லைப் பகுதியான தேனி மாவட்டம்கூடலூர் மற்றும் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் குமுளியிலும் பதற்றம்நிலவுவதால் இரு பகுதிகளிலும் இரு மாநிலக் காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் உள்ளனர்இந்நிலையில் அணைக்கு மத்திய அரசின் தொழில்பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர்மத்திய அரசிடம் கோரியுள்ளார்.

சிக்கல்


1979ல் மலையாள மனோரமா ஏடுஅணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்பகேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாககுறைத்து விட்டதுகேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டுதமிழகம் அந்தஅணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடிநீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ளவில்லைஇந்த சிக்கல் உச்ச நீதி மன்றத்துக்குசென்றதுஉச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து142 அடி வரை உயர்த்த 2006 இல் உத்தரவிட்டதுஆனால் கேரள அரசு இந்தஉத்தரவை ஏற்க மறுத்ததுமார்ச் 18,2006 இல் தேதி கேரள சட்டமன்றத்தில்,முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச உயரத்தை 136 அடியாக நிர்ணயம்செய்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதுஇதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா,நீதிபதிகள் எச்.எல்.தத்துசந்திரமவுலி பிரசாத்மதன் லோகுர்எம்.ஒய்.இக்பால்ஆகியோர் அடங்கிய அமர்வு இவ் வழக்கின் தீர்வை மே 7, 2014 இல் அறிவித்தது.
தீர்ப்பின் விவரம்:
  • உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுத்து கேரள அரசு சட்டம் நிறைவேற்றிஇருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானதுஎனவே அச்சட்டம் ரத்துசெய்யப்படுகிறது.
  • மத்திய நீர்வளக் குழுவைச் சேர்ந்த ஒருவரை தலைவராகக் கொண்டமூன்று பேர் குழுவின் கண்காணிப்பில் முல்லைப் பெரியாறுஅணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும். 2006-ம்ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இக்குழு அமல்படுத்தவேண்டும்.
  • இந்த குழுவில் தமிழகம் சார்பில் ஒருவரும் கேரளா சார்பில் ஒருவரும்உறுப்பினராக இருக்க வேண்டும்இக்குழுவின் அலுவலகம் கேரளத்தில்அமைய வேண்டும்.குழுவின் செலவுகளை தமிழக அரசு ஏற்கவேண்டும்.
  • அணையின் நீர்மட்டத்தை உறுதி செய்வதுடன்பருவமழைகாலங்களில் அணையின் நீர்மட்டம்பாதுகாப்பு குறித்து இக்குழுகண்காணிக்கும்.
  • உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதமிழகம் சார்பில் பராமரிப்புப் பணிகளைமேற்கொள்ள இக்குழு அனுமதி அளிக்க வேண்டும். *அணையின்பாதுகாப்பு குறித்து இரு மாநில அரசுகளுக்கும் இக்குழு உத்தரவுகளைபிறப்பிக்கலாம்அந்த உத்தரவை இரு மாநில அரசுகளும் நிறைவேற்றவேண்டும்.
  • புதிய அணை கட்டும் விஷயத்தில்கேரள அரசு தன் முடிவைதமிழகத்தின் மீது திணிக்க முடியாதுபுதிய அணை கட்டுவதென்றால்,அது இரு மாநில அரசுகளின் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும்.
35 ஆண்டுகளுக்கு பிறகு , அணையின் நீர் மட்டம் 142 அடியை, 20 நவம்பர் 2014அன்று எட்டியது


கடலுக்குச் சென்ற தண்ணீர்


136 அடிக்கு மேல் நீர்தேக்க கேரள அரசு அனுமதி மறுத்ததால் 14.11.2006 முதல்1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டி.எம்.சிதண்ணீர் வீணாகக்கடலுக்குச் சென்றது.

ஆனந்த் குழு


முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய 2010 பிப்ரவரியில்இந்திய உச்சநீதி மன்றத்தால் ஒரு குழு நியமிக்கப்பட உத்திரவிடப்பட்டது.இதன்பேரில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஆனந்தைத் தலைவராகவும்இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின்முன்னாள் செயலாளர் சிடிதட்டேஇந்திய அரசின் நீர் ஆணையத்தின்முன்னாள் தலைமைப் பொறியாளர் பிகேமோஹதாதமிழ்நாடு அரசின்பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆர்லட்சுமணன்கேரளஅரசின் பிரதிநிதியாக உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி கேடிதாமஸ்ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு ஐந்து பேர் குழு ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளனஇக்குழு ஏப்ரல் 25, 2012 இல் தனது அறிக்கையைசமர்ப்பித்ததுஅதன் அறிக்கையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாகஉள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

Comments